

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு ஆழ்கடல் பகுதியில் தடைக்காலம் முடிவடைந்து, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முட்டம், குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத், கோவா வரை இந்த தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து முட்டம், குளச்சல் முதல் நீரோடி வரை உள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.