

கன்னியாகுமரி அருகே மேலமணக்குடி பகுதியில் மீனவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி மனைவி மீது டார்ச் அடித்து பார்த்ததை தட்டி கேட்ட, வின்சென்ட் என்ற மீனவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவர்கள் இரண்டு பேர் உட்பட 4 பேரை சுசீந்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர். இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாகி உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.