Kumari | Crocodile | "சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.."| கோதையாற்றில் ஹாயாக வலம் வரும் முதலை

Kumari | Crocodile | "சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.."| கோதையாற்றில் ஹாயாக வலம் வரும் முதலை

Kanniyakumari | Crocodile | "சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.."| கோதையாற்றில் ஹாயாக வலம் வரும் முதலை குமரி கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை - பொதுமக்கள் அச்சம் குமரி மாவட்டம் கோதையாற்றில் தென்பட்ட முதலையை பிடிக்க வனத்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இதுவரை பலனளிக்காத நிலையில், களியல் பகுதியில் மீண்டும் முதலை தென்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தென்பட்ட முதலையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து, சிறப்பு குழுவினரை கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் முதலை சிக்கவில்லை. இந்நிலையில், செங்குழிக்கரை பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களியல் பகுதியில் முதலை மீண்டும் காணப்பட்டதை பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த பகுதி மக்கள் குளியல் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் இடமாக இருப்பதால், முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com