கன்னியாகுமரி : கப்பல் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 25-சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி : கப்பல் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை
Published on
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 25-சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் அருகே சலேட் நகர் பகுதியை சேர்ந்தவர் இன்ஃபன்ட் விஜூ. கப்பலில் பணியாற்றும் இவர் அருகில் உள்ள தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதேபோல் அவரது சகோதரர் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு வீடுகளிலும் பின்பக்க கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. இதுதொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com