அய்யா வைகுண்டரின் அவதார தினம்.. அமோக வரவேற்பு அளித்த இஸ்லாமியர்கள் | ayya vaikundar

x

கன்னியாகுமரி அருகே அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பு வரை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இடலாக்குடி பகுதிக்கு ஊர்வலம் வந்த போது, அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள், அவதார தின ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாக திகழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்