கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்
Published on

தக்கலை அருகே புலியூர்க்குறிச்சியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர் ஒருவர் ஏராளமான ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏ.டி.எம் மையத்திற்கு வெளியே காத்திருந்த வாடிக்கையாளர்கள் அந்த நபர் மீது சந்தேகமடைந்து அவரை பிடித்து விசாரித்தனர். ஏராளமான

ஏ.டி.எம். கார்டுகளை வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து, பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மதுசூதனன் என்பதும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முயல்வதற்கு முன் தக்கலையில் உள்ள ஒரு கடையில் இரண்டாயிரம் ரூபாய் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 70-ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையில் அந்த நபர் பணம் திருடும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com