Kanniyakumari | இரவில் தனியாக சென்ற பெண்ணை பைக்கில் துரத்தி சென்று இளைஞர் செய்த அசிங்கம்

x

இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது. கன்னியாகுமரி, மயிலாடி அருகே இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வடசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலை முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில், பெண்ணிடம் அத்துமீறியது தாழக்குடி பகுதியை சேர்ந்த 25 வயது கூலித் தொழிலாளி அனீஸ் எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்