"குழந்தைய நான் பார்க்க கூடாதா?" - ஸ்கூல் HM-ஐ கன்னத்தில் அறைந்த இளம்பெண்

x

குமரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை இளம்பெண் ஒருவர் கன்னத்தின் அறையும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தையை பார்க்க இளம்பெண் ஒருவர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி கோரியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர், தகப்பனாரின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்