Kanniyakumari | ஆசையாக பர்த்டே சாக்லேட் கொடுத்த மாணவி - சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் நேர்ந்த அதிர்ச்சி
ஆசையாக பர்த்டே சாக்லேட் கொடுத்த மாணவி - சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் மாணவர்கள் நேர்ந்த அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சாக்லேட்டை விற்பனை செய்த கடைக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் சாக்லேட் வழங்கியுள்ளார். இதனை சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்து மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சோதனையில் சாக்லேட் காலாவதியானது தெரிய வந்தது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த சாக்லேட்டை விற்பனை செய்த கடையை சோதனையிட்டு அபராதம் விதித்தனர்.
