Kanniyakumari | பிளாட்பார்மில் தூங்கிய நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைகோ..
நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை...அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது கன்னியாகுமரியில், பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நரிகுறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளச்சல் மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஜவகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
