ஜெபம் செய்ய வந்த 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த மதபோதகர் - குடும்பத்தோடு கைது

x

குமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியை சேர்ந்த மதபோதகர் ஜாண்ரோஸ் என்பவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் நடத்திவருகிறார். இந்நிலையில், ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற 13 வயது சிறுமியை ஜாண்ரோஸ் மிரட்டி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீசார் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான்ரோஸ், குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜெலின்பிரபா, அவரது மகன் பிரதீப் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்