kanniyakumari | Medical waste | சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு.. உடனே ஆக்‌ஷன் எடுத்த நகராட்சி

x

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட குளவரம்பு பகுதியில், சாலையின் இருபுறமும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் மருத்துவ கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்