Kanniyakumari Fire Accident | குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. காலையிலேயே பரபரப்பு
Kanniyakumari Fire Accident | குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. காலையிலேயே பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.. நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் பெரும் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீச்சு அடித்து தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
