Kanniyakumari | Attack | ஆபத்தை உணராமல் கடலில் குளியல் | எச்சரித்த காவலாளிக்கு சரமாரி அடி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், ஆபத்தை உணராமல், கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை வெளியேறச் சொன்ன சுற்றுலா காவலாளி பால்ராஜ் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கோடை விடுமுறையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மதுரையை சேர்ந்தவர்கள், அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்... இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
