ரஷ்யா செல்லும் கனிமொழி... இந்திய அரசு, முதல்வருக்கு நன்றி
ரஷ்யா செல்லும் கனிமொழி... இந்திய அரசு, முதல்வருக்கு நன்றி
தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய அரசின் நிலைப்பாட்டை பிற நாடுகளுக்கு எடுத்துக் கூற தனது தலைமையில் குழு அமைத்தற்காக, இந்திய அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சார்பில் ஒரு குழுவிற்கு தலைமையேற்று, ரஷ்யா, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
Next Story
