

அப்போது, சஷ்டி விழாவின் போது பக்தர்கள் அதிகம் கூடும் கோயில் வளாக இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் பிராகரங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்த சஷ்டி திருவிழா அன்று, பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும், அதற்கான ஏற்பாடு பற்றியும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். வரும் 5ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் சஷ்டி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.