கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலம்: "ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்க கோரிக்கை" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலம்: "ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்க கோரிக்கை" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கோயிலுக்கு கடந்த 1884 ஆம் ஆண்டு விநாயகா என்பவர் 177 ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்து, அதை பத்திரப்பதிவும் செய்திருந்தார். இந்த நிலையில், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, பட்டா வழங்க உத்தரவிட கோரி, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com