ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழா ஏற்பாடு : உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழா ஏற்பாடு : உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
Published on
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கில் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருவிழாவை தடையின்றி நடத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொடி ஏற்றப்பட்ட நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் சேமாஸ்கந்தர் சிலையை சீரமைக்கும் பணிக்கு உரிய முறையில் அனுமதி வழங்காமல் காலம்தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டிய பக்தர்கள், மற்றும் உபயதாரர்கள், கோயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com