Kanchipuram | விளையாட போன மகளை பிணமாக பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. பெற்றோர்களே உஷார்
செப்டிக் டேங்க் குழியில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில், 8 வயது சிறுமி செப்டிங் டேங்க் குழியில் விழுந்து உயிரிழந்தார். ரமேஷ்- ரேணுக தம்பதியின் மூத்த மகள் கனுஸ்ரீ, பக்கத்து வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், நீண்ட நேரம் கழித்து பார்த்தபோது, சிறுமி உள்ளே விழுந்தது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
