ஒரே நாளில் காஞ்சிபுரத்தை உலுக்கிய சோகம் - வெவ்வேறு காரணங்களால் பறிபோன 4 உயிர்கள் | Kanchipuram

ஒரே நாளில் காஞ்சிபுரத்தை உலுக்கிய சோகம்

வெவ்வேறு காரணங்களால் பறிபோன 4 உயிர்கள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு காரணங்களால் இளம்பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் பகுதியில், தனியார் நிறுவனத்தில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜித்குமார் என்பவர், கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அதேபோல் ஆந்திராவை சேர்ந்த வினய் என்ற கல்லூரி மாணவர், தான் தங்கியிருந்த தனியார் அப்பார்ட்மெண்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே தண்டலம் அருகேயுள்ள, பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், அஜித் என்ற இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், கீவளூர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பலீமா என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com