Kanchipuram Murugan Temple | வெள்ளித்தேர் உற்சவம் - தேரில் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்த முருகன்

x

Kanchipuram Murugan Temple | வெள்ளித்தேர் உற்சவம் - தேரில் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்த முருகன்

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளித்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான குமரக்கோட்டம் முருகன் கோவிலில், ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. முருக பெருமான் வெண் நிறப்பட்டு உடுத்தி, வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில், வள்ளி, தெய்வானையுடன் கோவில் வளாகத்தில் உலா வந்தார். இதில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்