பால்குடம் எடுத்த மியா கலிஃபா... வெடித்த விபரீதம்... விரைந்து வந்த போலீசார்... பரபரத்த காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் மியா கலிஃபா புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நாகாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஆடி மாத வளைகாப்பு வைபோக விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் மியா கலிஃபா பால்குடம் எடுத்துச் செல்வதைப் போல் இடம்பெற்றுள்ள புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது... பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர்.

X

Thanthi TV
www.thanthitv.com