

முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
கிருஷ்ணகிரி அருகேயுள்ள காவேரிப்பட்டினத்தில் முட்டைகள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. இதில், வேனில் இருந்த முட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறி விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முட்டை கழிவுகளை அப்பறப்படுத்தினர்.