

காஞ்சிபுரத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்த ரோஜா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பெண்ணை காரை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ரோஜாவை ராஜேஷ் கைவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ரோஜா தனியார் தோட்டம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை போலீசார் மீட்டனர். ரோஜா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். ரோஜா பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் , ராஜேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.