

இதன்படி, காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டமும், செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு செங்கல்பட்டு மாவட்டமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் குன்றத்தூர் வட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 கோட்டங்களும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட உள்ள வண்டலூர் வட்டம் ஆகியன, செங்கல்பட்டு புதிய மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.