சிறுமியை திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி - தாய்க்கு அடி, தந்தைக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கீவளூர் பகுதியை சேர்ந்த சகா என்ற சீனிவாசன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கட்டாய காதல் திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பான தகராறில், சிறுமியின் தாயாரை தாக்கியதுடன், தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சீனிவாசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
