அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.
அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி
Published on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடை உடுத்தி, ஆண்டாள் கிளி, மயில் இறகுடன், பஞ்ச வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதன் அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டதால், வழக்கமாக 5 மணிக்கு தொடங்கும் தரிசன நேரம் மாற்றப்பட்டு, 7 மணிக்கு மேல் தரிசனம் தொடங்கியது. 17ஆம் தேதியோடு உற்சவம் நிறைவடைய உள்ளதால், அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com