புத்தக வாசிப்பை வலியுறுத்தி மாணவிகள் பேரணி : 700 மாணவிகள் ஒரே இடத்தில் புத்தகம் வாசித்து அசத்தல்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில், புத்தக வாசிப்பை வலியுறுத்தி பேரணியும், 700 மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
புத்தக வாசிப்பை வலியுறுத்தி மாணவிகள் பேரணி : 700 மாணவிகள் ஒரே இடத்தில் புத்தகம் வாசித்து அசத்தல்
Published on

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில், புத்தக வாசிப்பை வலியுறுத்தி பேரணியும், 700 மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தப்பட்டது. இதில், வாசிப்பை வலியுறுத்தி, மாணவிகள், பதாகைகளை ஏந்தியபடி வலம் வந்தனர். அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. 700 பேர் ஓரிடத்தில் அமர்ந்து புத்தக வாசிப்பில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

X

Thanthi TV
www.thanthitv.com