காமராஜர் பல்கலை., பதவி உயர்வு முறைகேடு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பல்கலை., பதவி உயர்வு முறைகேடு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை
Published on

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்தபோது, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தி, முறைகேட்டையும் உறுதி செய்து அறிக்கை அளித்தது. இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சிண்டிகேட் துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உயர்மட்ட குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், ஆய்வுக்கழக நடவடிக்கை இறுதி கட்டத்தில் இருப்பதால், அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com