

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நவம்பர் மாதம் தேர்வுகள் நடந்தப்பட்டு அதற்கான விடைத்தாள்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி ஒன்றின் 360 விடைத்தாள் கட்டு மட்டும் மாயமானது. இதனால் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 5 மாதங்களாக விடைத்தாள் தேடும் பணி தொடர்ந்து வந்த நிலையில், எந்த பேருந்தில் காணாமல் போனதோ, அதே பேருந்தில் இருந்து விடைத்தாள் கட்டு மீட்கப்பட்டது. 5 மாதங்களாக மாணவர்கள் பலர் பயணித்து வந்த பேருந்தில் இருந்து திடீரென தொலைந்து போன விடைத்தாள் கட்டு மீட்கப்பட்ட சம்பவம், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.