பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் - பக்தர்கள் தரிசனம்

மதுரை தல்லாகுளம் பகுதியில் நள்ளிரவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். முன்னதாக ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில், கள்ளழகருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கருப்பண்ணசாமி கோவில் முன் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அழகர் மலை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com