65 உயிர்களை காவு வாங்கியும் அடங்காத அரக்கன்கள்... கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் கச்சிராயபாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக தந்தையும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மற்றும் அவருடைய மகன் விஜயகுமார் ஆகிய இருவரும் மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com