"இது மட்டுமே நிரந்தர தீர்வு" - தேதி குறித்து திருமாவளவன் சொன்ன தகவல்

"இது மட்டுமே நிரந்தர தீர்வு" - தேதி குறித்து திருமாவளவன் சொன்ன தகவல்
Published on

தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, சென்னையில் வரும் 24-தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்திற்கு வருகை தந்த அவர், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, இறுதிச் சடங்கு செலவுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், உறுதியான முடிவெடுத்து, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com