Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி ஆபாச மெசேஜ் வழக்கு - ஒரே இடத்தில் கூடிய முக்கிய அதிகாரிகள்..

Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி ஆபாச மெசேஜ் வழக்கு - ஒரே இடத்தில் கூடிய முக்கிய அதிகாரிகள்..

Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி ஆபாச மெசேஜ் வழக்கு - ஒரே இடத்தில் கூடிய முக்கிய அதிகாரிகள்.. அதிரடி விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.. இது தொடர்பாக எம்எலஏ அருள் விக்னேஷ் மீது பாலியல் ரீதியான கருத்துகளை தெரிவிப்பது, பாலியல் நோக்கத்துடன் அணுகுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்... மேலும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு காவலர், நேர்முக எழுத்தர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்...

X