Kallakurichi | முதிய தம்பதியை துடிதுடிக்க கொன்ற நபர்.. போலீசையே நடுங்கவிட்ட பகீர் காரணம்

Kallakurichi | முதிய தம்பதியை துடிதுடிக்க கொன்ற நபர்.. போலீசையே நடுங்கவிட்ட பகீர் காரணம்

மனைவியைப் பிரிந்த ஆத்திரத்தில் முதிய தம்பதி கொலை - திடுக்கிடும் தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில், விவசாய நிலத்தில் தங்கியிருந்த முதிய தம்பதியினர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமசாமி-பொன்னம்மாள் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், ராமசாமியின் பேத்தி மேகாவின் கணவர் சதீஷை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். குடும்பப் பிரச்சினையால் தன்னைப் பிரிந்து சென்ற மனைவியை அனுப்ப மறுத்த ஆத்திரத்தில் அவர்களை கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் தம்பதியினருடன் தகராறு செய்த சதீஷ், அங்கிருந்த கல்லை எடுத்து இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com