கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்.. பரபரப்பு காட்சிகள்

கல்வராயன் மலைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை பறிமுதல் செய்த நிலையில், முழுவதையும் தரையில் கொட்டி அழித்திருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலையின் கருந்துறை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மலைப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், இரண்டு பேரல்களில் இருந்து சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை கைப்பற்றிய நிலையில், முழுவதையில் தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து இதன் பின்னணி குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com