கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்
Published on

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடந்த வாரம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கான சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிரண் குராலாவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு அதிகாரி கிரண்குராலா ஐ.ஏ.எஸ். கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com