Kallakurichi Death | வீட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
Kallakurichi Death | வீட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
Kallakurichi Death | வீட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் துடிதுடித்து பலி - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புது பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர், மழையின் போது வீட்டின் முன்பு காயவைத்த துணிகளை எடுக்கச் சென்ற போது, மின்கசிவு ஏற்பட்டிருந்த கொட்டகைத்தகர சீட்டைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி பலியானார். அவரைத் தேடி வந்த அவரது கொழுந்தன் கணேசனும், அங்கு வீழ்ந்து கிடந்த அண்ணியை மீட்க முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கராபுரம் போலீசார் உடல்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
