

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள விழாவுக்கு, சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். விருது பெறும் கலைஞர்களுக்கு, தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை முதலமைச்சர் வழங்க உள்ளார். கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.