குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை

Published on

குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை.

பெண்கள் பொதுவாக தன் தாய் தந்தையர் மற்றும் கணவரிடம் மட்டும் தான் உரிமையுடன் தமக்கு வேண்டியதை கேட்டுப் பெறுவர். காரணம் அங்கே இருக்கும் உரிமை. உரிமை இல்லா இடத்தில் எதையும் பெறுவதை விரும்ப மாட்டார்கள். மன்னனாகவே இருந்தாலும் கூட அவனிடம் வாய் திறந்து வேண்டிய பொருளை கேட்க மாட்டார்கள். ஆனால் நியாயத்திற்காக எந்த அளவிற்கு போராடுவார்கள் என்பது நம் இலக்கியம் சொல்லும் உண்மை. இப்படி இருக்க திராவிட முன்னேற்ற கழகம் பெண்களின் மனம் அறிந்து உங்களுக்கு பெற்றோர்களிடம் இருக்கும், கணவரிடம் இருக்கும் அதே உரிமை இந் நாட்டை ஆளும் அரசிடமும் உள்ளது. நீங்கள் இங்கேயும் உரிமையுடன் கேட்டுப் பெற முடியும் எனும் நோக்கில் மகளிர்க்கு அளிக்கும் மாதாந்திர தொகையை அவர்களின் உரிமை தொகை என்று பெயரிட்டு இருப்பது அற்புதம்.

குடும்பத் தலைவிகள் மட்டுமல்ல, தாயும் தந்தையும் இல்லாமல் கணவனையும் இழந்த பெண்கள் எல்லாம் எப்போதும் உரிமையுடன் அரசை அணுக முடியும். தனக்கு வேண்டியதை கேட்டு உரிமையோடு பெற முடியும் என்கின்ற முறையை புத்துருவாக்க சிந்தனையுடன் தொலைநோக்குப் பார்வையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருப்பது அனைவரின் பாராட்டையும் பெறுகிறது.

பெண்களுக்கு மாதாமாதம் அவர்களின் ஆரோக்கியம் பொருட்டு அடிப்படை செலவுகள் என சில உண்டு. ஆனால் எப்போதும் குடும்ப நலம் பற்றிய என்னும் அவர்கள் தங்கள் உடல்நலத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்த உரிமை தொகை அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றால் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் நாட்டின் ஆரோக்கியத்திற்கு வித்திடும் எனலாம்.

வீட்டில் ஆண் மட்டும்தானே உழைக்கிறார் நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் நான் என்ன சம்பாதிக்கின்றேனா எனக்கென்ன பணம் தனியாக வருகின்றதா என ஏங்கி க் கிடக்கும் மகளிரின் உள்ளத்தே நம்பிக்கை ஊற்றாய் இந்த உரிமை தொகை மாதாந்திரம் அவர்களின் கைகளில் தவழும் போது உள்ளத்தை மகிழ்வுக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com