“காதலே... காதலே...தனிப்பெருந்துணையே“ கேரளாவில் முதிய ஜோடி காதல் திருமணம்
காதலே... காதலே ... - முதிய ஜோடி காதல் திருமணம்
கேரள அரசு முதியோர் இல்லத்தை சேர்ந்த இரண்டு முதியவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும், நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூரில் அமைந்துள்ள அரசு முதியோர் நல காப்பகத்தில் வசித்து வருபவர் 79 வயதான விஜயராகவன். இவர் அதே காப்பகத்தை சேர்ந்த 75 வயதான சுலோச்சனா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஓருவரை ஒருவர் நேசித்து வந்த நிலையில், தங்கள் திருமணம் குறித்து காப்பகத்தில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அம்மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து, திருச்சூர் நகர மேயர் எம்.கே.வர்கீஸ் முன்னிலையில், சிறப்பு திருமண சட்டத்தின்படி, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
Next Story
