

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நெடுங்குளம் கண்மாய், தூத்துக்குடி விமான நிலையம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து தூர்வாரப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விமான படைக்கு ஒப்படைப்பதற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனால் விரைவில் விமான படைபிரிவு, விமான தளம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதாக கூறினார்.