"கடைசி விவசாயி" பட தாய்க்கு சொந்த மகனே எமனான கொடூரம் - உசிலம்பட்டியை உலுக்கிய பயங்கரம்

ஆனையூரைச் சேர்ந்த காசம்மாள் விவசாய கூலி தொழிலாளி... கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார்.

காசம்மாளின் மூத்த மகன் நமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக தனது தாய் தந்தையுடன் இருந்த நிலையில், போதைக்கு அடிமையான நமகோடி மது அருந்த அடிக்கடி காசம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்... இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்... பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் அடித்துக் கொலை செய்த நமகோடி அங்கிருந்து புறப்பட்டுள்ளார்... போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மகன் நமகோடியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com