கச்சத்தீவு திருவிழா... வெளியான கட்டண விவரம் | Kachchatheevu

x

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரம் பேர் செல்ல இருப்பதாக திருப்பயண ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா வருகிற மார்ச் 14, 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், இதற்கான அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து, ஏற்பாடுகளை செய்துதருமாறு கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒருங்கிணைப்புக் குழுவினர், கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு படகு கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்களிடம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்