காரை மறித்து தும்பிக்கையால் தள்ளிய கபாலி - பீதியில் கத்திய மக்கள்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி மழக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டு யானை காரை மறைத்து, தும்பிக்கையால் காரை தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல் வாய்ப்பாக காரில் இருந்த பயணிகள், வெளியேறி பாதுகாப்பான இடத்தில் நின்ற நிலையில், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானை கபாலி, காரை அசைத்து பார்த்த போது, அங்கிருந்தவர்கள் அச்சத்தில் கூக்குரல் எழுப்பினர். இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
