கபடி விளையாட்டில் காயம் - வீரர் உயிரிழப்பு
சிவகங்கையில் கபடி விளையாடிய 54 வயதான வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு பிச்சாந்துபட்டியை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் சிவகணேஷ் எனத் தெரியவந்துள்ளது. பட்டமங்கலம் பகுதியில் நடந்த 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி போட்டியில் தான் இந்த சோகம் நடந்துள்ளது. இவர், கையில் ஏற்பட்ட காயத்துக்காக, கண்டாரமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்றார். பிறகு, மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
