"காணும் பொங்கல் லீவை ரத்து செய்யபரிந்துரைப்போம்"- சென்னை மெரினா நிலையை கண்டு நீதிபதிகள் எச்சரிக்கை

x

மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பிய பசுமைத் தீர்ப்பாயம், காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரம் தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,

தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, தனக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார்.

கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகக் குறிப்பிட்டது.

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான சண்முகநாதன், குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி, அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், குப்பைகளை வீசிச் செல்வதாகவும் தெரிவித்தார்.

குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், இதுசம்பந்தமாக விளக்கமளிக்கும்படி, சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்