#JUSTIN || ATM-க்கு வந்த ஹவாலா பணம்-சென்னையை திடுக்கிட வைத்த கொள்ளையில் பெரும் ட்விஸ்ட்
JUSTIN || ATM-க்கு வந்த ஹவாலா பணம்-சென்னையை திடுக்கிட வைத்த கொள்ளையில் பெரும் ட்விஸ்ட்
ஏடிஎம் டெபாசிட் செய்ய சென்ற இளைஞரை தாக்கி ஹவாலா பணம் ரூ. 2.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலால் பரபரப்பு.
பைக்கையும் டோ செய்து திருடி சென்ற சம்பவம்..
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மைனர் அலி. இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள பேக் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவரிடம் மண்ணடியைச் சேர்ந்த முகமது என்பவர் ரூ. 2.70 லட்சம் பணத்தை கொடுத்து ஏடிஎம் மூலம் வங்கி கணக்கில் செலுத்தும்படி அனுப்பி வைத்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள ஐஓபி வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சென்றார். அப்போது ஏடிஎம் வாசலில் வைத்து அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து மைனர் அலியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். மேலும் மைனர் அலியின் பைக்கையும் டோ செய்து திருடி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மைனர் அலியிடம் புகாரை போலீசார் பெற்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹவாலா பணத்தை கொண்டு செல்வதை அறிந்து அந்த கும்பல் பின் தொடர்ந்து வந்து கொள்ளையடித்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
