"தமிழ் மொழி, தமிழர் நாகரீகம் மிக தொன்மையானது"-உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

தொன்மையான தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரீகத்தை, அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் மொழி, தமிழர் நாகரீகம் மிக தொன்மையானது"-உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
Published on

தொல்லியல் கழகத்தின் 28-ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் ஆவணம் 29 இதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. 2 நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், தமிழர் நாகரீகம், பழமையான நாகரீகம் என்பதை மறைக்க சிலர் முற்படுவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com