கல்யாணம் முடிந்த 2 நாளில் மாப்பிள்ளைக்கு பெரிய ஷாக் கொடுத்த புதுப்பெண்
கன்னியாகுமரியில் திருமணமான இரண்டே நாட்களில் மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரம் பகுதியின் அருகே உள்ள செல்வன் புதூரை சேர்ந்த கண்ணன் என்பவரின் முதல் மனைவி உயிரிழந்த நிலையில், அவருக்கு புரோக்கர் மூலம் தென்காசியை சேர்ந்த தேவி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த சூழலில், திருமணமாகி 2 நாட்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்பு, கடந்த ஜூலை 1 ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத போது தேவி வெளியே சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என கண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story